கொழும்பு ஆனந்த கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர் தலைவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தலைமைத்துவ நிகழ்ச்சி பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அண்மையில் (30) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. ஆனந்தக் கல்லூரியின் 2004ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர, பதவியணித் தலைமை அதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, ஆனந்த கல்லூரியின் பழைய மாணவரும், உதவிச் செயலாளர் நாயகமுமான ஹன்ச அபேரத்ன, கொழும்பு ஆனந்த கல்லூரியின் அதிபர் லால் திசாநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

“நாளைய தலைவர்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஆனந்தக் கல்லூரியின் ஐந்தாம் ஆண்டைச் சேர்ந்த 80ற்கும் அதிகமான மாணவத் தலைவர்கள் இணைந்திருந்தனர். இங்கு பல்வேறு துறைகளின் கீழ் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, தனது வாழ்க்கை அனுபவங்களை விளக்கியதுடன் பிரதி சபாநாயகர் பதவிக்கு வந்த விதம் மற்றும் அதனுடன் எதிர்கொண்ட சவால்களை சமாளித்த விதம் போன்ற விடயங்களை விளக்கினார். இங்கு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஊடாக சமூக நலனுக்காக முக்கியமான பல சட்டதிட்டங்களை நிறைவேற்றுவதற்குப் பங்களிப்புச் செலுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர பாராளுமன்றத்தின் வரலாறு மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றிய எளிமையான தகவல்களை வழங்கினார். அத்துடன், ஆனந்த கல்லூரி இலங்கையில் உருவாக்கியுள்ள தலைமைத்துவப் பண்புகளைப் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் மாணவர்களுக்கு நினைவூட்டினார். மேலும், ஆனந்த கல்லூரி மாணவர்களின் தலைமைத்துவ குணங்கள் குறித்து ஆனந்த கல்லூரியின் அதிபர் லால் திஸாநாயக்க மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.

இந்தத் தலைமைத்துவ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்குப் பிரதி சபாநாயகர் தலைமையில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஆனந்த கல்லூரியின் ஆரம்பப் பிரிவின் அதிபர் நுவன் பிரியந்த, மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி கோசல முத்துகுமாரன, ஆனந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் நிறைவேற்றுத் தலைவர் பேராசிரியர் அதுல களுவாரச்சி, இலங்கை பாடசாலை ஜீட் ஹூண்டோ பிரதான தற்காப்புக் கலைப் பயிற்றுவிப்பாளர் தித்திர பெரேரா, ஆனந்தக் கல்லூரியின் 2004ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் தரிந்து விஜேரத்ன உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ඊ-මේල් මගින් පිලිතුරු දෙන්න එය පිට

කරුණාකර ඔබගේ අදහස් ඇතුළත් කරන්න.
කරුණාකර ඔබගේ නම ඇතුලත් කරන්න