அநுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம், பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்களை குறைப்பதற்கான எமது கூட்டு முயற்சிகளின் தோல்வி குறித்து மீண்டும் ஒரு கடுமையான கருத்தாடலை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையை எதிர்கொண்ட பெண்ணுக்கு எங்கள் ஒற்றுமையையும் அனுதாபத்தையும் வெளிப்படுத்தும் அதே வேளையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சமூகப் பிரிவு அல்லது அடையாளம் எதுவாக இருந்தாலும், பெண்களுக்கு எதிரான அவமதிப்பு மற்றும் வன்முறை கலாச்சாரத்தை ஒழிப்பதே எமது முக்கிய பணியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் குறித்து தினமும் கேள்விப்பட்டுகிறோம். கொலை தொடக்கம் பாலியல் வன்முறை வரையில் பார்க்கும் போது, தொழில் புரியும் இடம் முதல் சைபர் தளம் வரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இடம்பெறுகின்றன. பெண்கள் மீதான துஷ்பிரயோகம் பற்றி பேசுவது இன்று ஒரு பொதுவான விடயமாகி இருப்பதுடன், அது பெண்மைக்கு எதிரான கலாச்சாரத்தை தோற்றுவிக்கும் பெரிய சிக்கலை காட்டுகிறது. இணையவழி துஷ்பிரயோகம் மற்றும் வாய்மொழி துன்புறுத்தல் என்பன பெண்களை இழிவுபடுத்தும் கலாச்சாரத்துடன் இணைந்த பகுதியாகும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
இந்த விடயத்தை பார்க்கும்போது சமூகத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் இதற்கு உணர்வுபூர்வமான பிரதிபலிப்புகள் கிடைத்திருந்தாலும், தற்போது வழமையான பெண் துஷ்பிரயோக கதை என்ற வகையில் குறை மதிப்பீடு செய்யப்படுகிறது.
அதனால், வன்முறை மற்றும் துன்புறுத்தல்களுக்கு முகம்கொடுத்த பெண்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான மறுசீரமைப்புகளுக்காக தொடர்ச்சியான முன்னிலையாகும் பெண்கள் என்ற வகையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை மட்டுப்படுத்தும் கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்வதற்கு நாம் முயற்சிக்கும் வேளையிலும், இது தொடர்பிலான பொதுவான கருத்தாடலொன்றுக்கு ஒத்துழைக்க வேண்டியதும் எமது பொறுப்பாகும் என்று கருதுவோம்.
பாதிக்கப்பட்டவரின் அறிக்கையை ஊடகங்களில் வெளியிடுவதல் மற்றும் நமது சமூகத்தில் பெண்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையிலான வன்முறைக் குற்றங்கள் குறித்து உணர்வுகள் குன்றியிருப்பதையிட்டு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள், வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் தொடர்பில் உணர்வுபூர்வமாகவும் அவர்களின் கெளரவம் பாதுகாக்கப்படும் வகையில் செயலாற்ற வேண்டும்.
பல நேரங்களில், இந்த சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்த பின்னர் தங்கள் பெயருக்கு களங்கம் வந்துவிடும் என்ற அச்சத்தில் பெண்கள் முறைப்பாடு செய்ய தயங்குகின்றனர். அத்தகைய நிலைமைக்கு பின்னரும், தங்கள் உயிரை பாதுகாத்துக் கொண்ட அனைவரினதும் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். குற்றச் செயல்கள் தொடர்பில் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்படுவதை ஊக்குவிக்க, நீதித்துறை, பொலிஸார் மற்றும் ஊடகங்களினால் இதுபோன்ற சம்பவங்களுக்கு முகம்கொடுத்த பெண்களின் தனியுரிமையை மற்றும் நல்வாழ்வு பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பெரும்பாலும் இவ்வாறான தனியுரிமை மீறல்கள் பெரிய அளவில் பாதிப்பை எதிர்கொள்வதற்கும் பாதிக்கப்பட்டவர் அவதூறுக்கு உள்ளாவதற்கும் வழிவகுப்பதோடு, இந்த சம்பவத்திலும் நாம் அதனை பார்க்க முடிகிறது. வன்முறைக்கு பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணின் செயல்கள் அல்லது அவளைப் பற்றிய நம்பிக்கையை தொடர்பில் சமூக ஊடகங்களில் விவாதிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர் தொடர்பில் பல்வேறு முடிவுகள் எட்டப்படுவதை காண முடிகிறது. இதனால், பாலியல் சீண்டல்கள் தொடர்பில் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்வதை பெண்கள் தவிர்க்கின்றனர்.
எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணின் தனியுரிமையைப் பாதுகாக்குமாறும், துன்புறுத்தல் சம்வபம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான கதைகளை கூறுவதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறான நிகழ்வுகளை எதிர்கொண்ட ஒவ்வொருவரும் அந்த அதிர்ச்சிகளுக்கு ஒரே மாதிரியாக பதிலளிக்கவில்லை என்பதையும், பெண்களுக்கு எதிரான மறைமுகமான வன்முறை அச்சுறுத்தலுக்கு எதிராக போராடுவது அவசியமானது என்பதையும் வலியுறுத்துகிறோம். அதற்கு, இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண்களின் உண்மை அனுபவங்களை மையமாகக் கொண்டதாக நமது நீதிச் செயற்பாடுகள் அமைய வேண்டும்.
எனவே, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்குப் போராடும் நமது நிறுவனக் கட்டமைப்புகளின் திறனை மேம்படுத்த, நமது குற்றவியல் நீதி கட்டமைப்பை போலவே ஊடகங்களிலும் தேவையான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைக் கையாள பொலிஸார், நீதிபதிகள் மற்றும் ஊடகங்களுக்கு தெளிவான மற்றும் குறிப்பிட்ட தரநிலைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இறுதியாக, பெண்களுக்கு எதிரான வன்முறையை மட்டுப்படுத்துவதற்கான நமது சட்ட கட்டமைப்பு, ஊடகங்கள் மற்றும் பொலிஸ் துறைகளில் சிறப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். ஒரு சமூகமாக, உயிர் பிழைத்த பெண்களின் தனியுரிமையைப் பாதுகாப்பது, அவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல், அதைப் குறித்து முறைப்பாடு செய்ய முன்வரும் பெண்களை தையரியம் இழக்கச் செய்யாமல், அவர்களுக்கு நியாயம் கிடைக்க ஆதரவளிப்பது நமது பொறுப்பாகும்.
- கௌரவ. ஹரினி அமரசூரிய – பிரதமர் மற்றும் கல்வி உயர் கல்வி, தொழில் கல்வி அமைச்சர்
- கௌரவ. ஹேமாலி வீரசேகர – செயற்குழு பிரதித் தலைவர்
- கௌரவ. சரோஜா சாவித்ரி போல்ராஜ் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்
- கௌரவ. சட்டத்தரணி சாகரிகா ஆதாவுத- பாராளுமன்ற உறுப்பினர்
- கெளரவ. கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன – பாராளுமன்ற உறுப்பினர்
- கௌரவ. ஒஷானி உமங்கா – பாராளுமன்ற உறுப்பினர்
- கௌரவ. கிருஷ்னண் கலைச்செல்வி – பாராளுமன்ற உறுப்பினர்
- கௌரவ. சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி – பாராளுமன்ற உறுப்பினர்
- கௌரவ. சத்துரி கங்கானி – பாராளுமன்ற உறுப்பினர்
- கௌரவ. நிலூஷா லக்மாலி கமகே – பாராளுமன்ற உறுப்பினர்
- கௌரவ. சட்டத்தரணி சமன்மலி குணசிங்க – பாராளுமன்ற உறுப்பினர்
- கௌரவ. சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க – பாராளுமன்ற உறுப்பினர்
- கௌரவ. அனுஷ்கா திலகரத்ன – பாராளுமன்ற உறுப்பினர்
- கௌரவ. ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே – பாராளுமன்ற உறுப்பினர்
- கௌரவ. ஹசாரா லியனகே – பாராளுமன்ற உறுப்பினர்
- கௌரவ. தீப்தி வாசலகே – பாராளுமன்ற உறுப்பினர்
- கௌரவ. ஹிருனி விஜேசிங்க – பாராளுமன்ற உறுப்பினர்
- கௌரவ. அம்பிகா சாமிவேல் – பாராளுமன்ற உறுப்பினர்
- கௌரவ. சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர – பாராளுமன்ற உறுப்பினர்
- கௌரவ. சட்டத்தரணி கீதா ஹேரத் – பாராளுமன்ற உறுப்பினர்