அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் (17) கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டத்தின்போது, நிலையியற் கட்டளை 121 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2024 டிசம்பர் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமையவும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக குழுவின் தவிசாளராக கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவில் பணியாற்றுவதற்கான ஏனைய உறுப்பினர்களின் பெயர்களையும் சபாநாயகர் இன்று (18) சபையில் அறிவித்தார்.

இதற்கமைய, கௌரவ (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும, கௌரவ ரவி கருணாநாயக்க, கௌரவ ஹர்ஷன ராஜகருணா, கௌரவ நிமல் பலிஹேன, கௌரவ விஜேசிரி பஸ்நாயக்க, கௌரவ திலிண சமரகோன், கௌரவ சட்டத்தரணி (செல்வி) லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ප්රතිචාරයක් දක්වන්න

කරුණාකර ඔබගේ අදහස් ඇතුළත් කරන්න.
කරුණාකර ඔබගේ නම ඇතුලත් කරන්න