பாராளுமன்ற நிர்வாகப் பணியாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ முகாம் 2025.02.11ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. பாராளுமன்ற பணியாளர்கள், இணைந்த சேவைகளின் பணியாளர்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் இந்த மருத்துவ முகாம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, பாராளுமன்ற பதவியணித் தலைமை அதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, பாராளுமன்ற நிர்வாகப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் பாலித்த பிரியங்கர, அதன் செயலாளர் புத்திகா அபேசிங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

தொற்றாநோய் பரிசோதனை, சிறுநீரகம், கண், பல் பரிசோதனைகள், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை, உளவள ஆரோக்கியம் ஆகிய துறைகளில் சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளுக்கான வாய்ப்புக்கள் இந்த மருத்துவ முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ප්රතිචාරයක් දක්වන්න

කරුණාකර ඔබගේ අදහස් ඇතුළත් කරන්න.
කරුණාකර ඔබගේ නම ඇතුලත් කරන්න