தொழில்சார் நிபுணர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கும், தொழிற்சங்கங்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புகளைப் பெறுவதற்கும் அமைச்சரின் யோசனைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டுவரும் விசேட கலந்துரையாடல் நிகழ்ச்சிகளின் போதே சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், தொழிற்சங்கங்களுடனான விசேட கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட சுகாதாரத் துறையில் உள்ள பல முக்கிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் மிக நீண்ட தொடர் கலந்துரையாடலை நடத்தினார்.
மேற்படி தொடர் கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக, அமைச்சர் அண்மையில் அகில இலங்கை பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சின் அவசரச் சோதனை மற்றும் விசாரணை அதிகாரிகள் மன்றம் மற்றும் அகில இலங்கை தொலைபேசி செயற்பாட்டாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், சுகாதார ஊழியர்களின் அளப்பரிய அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியினால் மலேரியா, , போலியோ, தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி தொற்று போன்ற நோய்களை நாட்டிலிருந்து இல்லாதொழிக்க முடிந்துள்ளது.
அத்துடன், தற்போது இலங்கையில் இயங்கி வரும் இலவச சுகாதார சேவையானது வளர்ந்த நாடுகளில் செயற்படும் சுகாதார சேவையை போன்று செயற்படுவதாகவும், சுகாதார ஊழியர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து தொழில் வல்லுநர்கள் தொழில் முறை புரிதல் பேணுவதன் மூலமும் பரஸ்பர புரிந்துணர்வோடு பணியாற்றுவதன் மூலமும் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டுமென அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இக்கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர்களான வத்சலா பிரியதர்ஷனி, சாமிக்க கமகே, கே.பி.யோகசந்திர, பிரதி பணிப்பாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
මුල් පිටුව පුවත් இலங்கையில் இலவச சுகாதார சேவையின் கடமைகளை ஆற்றும் சுகாதார நிபுணர்களின் அதீத அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியினால்,...