2020 ஓகஸ்ட் 20ஆம் திகதி முதலாவது அமர்வில் ஆரம்பமாகி 2024 செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் கலைக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தின் காலப் பகுதியில் அரசியலமைப்பின் 66வது உறுப்புரைக்கு அமைய 19 பாராளுமன்ற உறுப்புரிமைகளுக்கான வெற்றிடம் ஏற்பட்டதுடன், இதற்காக 18 சந்தர்ப்பங்களில் 16 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இதற்கு அமைய 241 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட கௌரவ ஜயந்த கெட்டகொட இராஜினாமாச் செய்ததுடன், இவருக்குப் பதிலாக கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்கள் நியமிக்கப்பட்டார். அத்துடன், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கௌரவ ஜயந்த கெட்டகொட மீண்டும் நியமிக்கப்பட்டார். இதேபோன்று, கௌரவ முஜிபுர் ரஹ்மான் இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கௌரவ ஏ.எச்.எம்.பௌசி நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டயானா கமகே நீதிமன்ற உத்தரவின் பெயரில் உறுப்புரிமையை இழந்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு கௌரவ முஜிபுர் ரஹ்மான் மீண்டும் நியமிக்கப்பட்டார். எனினும், கௌரவ ஹரீன் பெர்னான்டோவின் வெற்றிடத்திற்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படவில்லை.

மிகவும் தனித்துவமான நிகழ்வுகளால் மக்களின் கவனத்தை ஈர்த்திருந்த ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வாக இந்நாட்டின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான கௌரவ கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது பதவியை இராஜினாமாச் செய்ததுடன், 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கௌரவ ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டமையாகும். இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கௌரவ ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டதும் அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்குப் புதிய உறுப்பினர் நியமிக்கப்பட்டமை உள்ளடங்கலாக 16 பேர் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

  பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் மற்றும் விலகுவதற்கான காரணம்உறுப்பினர் பதவி வெற்றிடமாவதற்கான காரணம் வெற்றிடத்திற்காக நியமிக்கப்பட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினரின் பெயர்
01கௌரவ ஜயந்த கெட்டகொட அவர்கள்இராஜினாமாச் செய்தமைகௌரவ பசில் ராஜபக்ஷ அவர்கள்
02கௌரவ அஜித் நிவாட் கப்ரால் அவர்கள்இராஜினாமாச் செய்தமைகௌரவ ஜயந்த கெட்டகொட அவர்கள்
03கௌரவ மஹிந்த சமரசிங்க அவர்கள்இராஜினாமாச் செய்தமைகௌரவ லலித் வர்ணகுமார அவர்கள்
04கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்கள்இராஜினாமாச் செய்தமைகௌரவ தம்மிக பெரேரா அவர்கள்
05கௌரவ முஜிபுர் ரஹ்மான் அவர்கள்இராஜினாமாச் செய்தமைகௌரவ ஏ.எச்.எம்.பௌசி அவர்கள்
06கௌரவ சமிந்த விஜேசிறி அவர்கள்இராஜினாமாச் செய்தமைகௌரவ நயன வாசலதிலக அவர்கள்
07கௌரவ உத்திக பிரேமரத்ன அவர்கள்இராஜினாமாச் செய்தமைகௌரவ எச்.சீ.முத்துகுமாரன அவர்கள்
08கௌரவ தலதா அதுகோரள அவர்கள்இராஜினாமாச் செய்தமைகௌரவ கருணாரத்ன பரனவிதானகே அவர்கள்
09கௌரவ ரஞ்ஜன் ராமநாயக அவர்கள்அரசியலமைப்பின் 89 மற்றும் 91 உறுப்புரைகளில் குறிப்பிடப்பட்டதற்கு அமைய தகுதி நீக்கம் செய்யப்படல்கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்கள்
10கௌரவ டயனா கமகே அவர்கள்அரசியலமைப்பின் 89 மற்றும் 91 உறுப்புரைகளில் குறிப்பிடப்பட்டதற்கு அமைய தகுதி நீக்கம் செய்யப்படல்கௌரவ முஜிபுர் ரஹ்மான் அவர்கள்
11கௌரவ நசீர் அஹமட் அவர்கள்கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கியமைகௌரவ அலி சாஹிர் மௌலானா அவர்கள்
12கௌரவ மனுஷ நாணயக்கார அவர்கள்கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கியமைகௌரவ பந்துல லால் பண்டாரிகொட அவர்கள்
13கௌரவ ஹரீன் பெர்னாந்து அவர்கள்கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கியமைபுதிய உறுப்பினர் நியமிக்கப்படவில்லை
14கௌரவ அமரகீர்த்தி அதுகோரல அவர்கள்உயிரிழந்தமைகௌரவ ஜகத் சமரவிக்ரம  அவர்கள்
15கௌரவ சனந் நிஷாந்த அவர்கள்உயிரிழந்தமைகௌரவ ஜகத் பிரியங்கர அவர்கள்
16கௌரவ எச்.நந்தசேன அவர்கள்உயிரிழந்தமைகௌரவ எம்.ஜே.வீரசேன அவர்கள்
17கௌரவ இரா.சம்பந்தன் அவர்கள்உயிரிழந்தமைகௌரவ கே.எஸ்.குகதாசன் அவர்கள்
18கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள்ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டமைகௌரவ வஜிர அபேவர்தன அவர்கள்
19கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்கள்ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டமைகௌரவ லக்ஷ்மன் நிபுணாரச்சி அவர்கள்

அத்துடன், ஒன்பதாவது பாராளுமன்றத்தில் கூட்டத்தொடர்கள் நான்கு தடவைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் இரண்டு தடவைகள் முன்னாள் ஜனாதிபதி கௌரவ கோட்டாபய ராஜபக்ஷவினால் பாராளுமன்றக் கூட்டத்தொடர்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன், மூன்றாவது மற்றும் நான்காவது தடவைகள் முன்னாள் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அமைய ஒன்பதாவது பாராளுமன்றத்தில் 5 கூட்டத்தொடர்கள் காணப்பட்டன. 2020.08.20 முதல் 2021.12.12 வரை முதலாவது கூட்டத்தொடரும், 2022.01.18 முதல் 2022.07.28 வரை இரண்டாவது கூட்டத்தொடரும், 2022.08.03 முதல் 2023.01.27 வரை மூன்றாவது மூட்டத்தொடரும், 2023.02.08 முதல் 2024.01.26 வரை நான்காவது கூட்டத்தொடரும், 2024.02.07 முதல் 2024.09.24 வரை ஐந்தாவது கூட்டத்தொடரும் நடைமுறையில் இருந்தன. இந்த ஐந்து கூட்டத்தொடர்களிலுமாக ஒன்பதாவது பாராளுமன்றம் மொத்தம் 390 நாட்கள் கூடியிருந்தன.

ඊ-මේල් මගින් පිලිතුරු දෙන්න එය පිට

කරුණාකර ඔබගේ අදහස් ඇතුළත් කරන්න.
කරුණාකර ඔබගේ නම ඇතුලත් කරන්න