GPS தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவக் கட்டமைப்பை செயற்படுத்துவது தொடர்பில் வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனத்திற்கு 

  • I3 CUBE மற்றும் நிம்பஸ் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ள பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவக் கட்டமைப்பு தொடர்பில் குழுவின் அவதானம்
  • இ.போ.ச. பஸ்களுக்கு GPS உபகரணங்கள் பொருத்துவதை துரிதப்படுத்தி I3 CUBE நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கட்டமைப்பை செயற்படுத்த ஆரம்பித்தல் மற்றும் நிம்பஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கட்டமைப்பை செயற்படுத்துவதற்குத் தேவையான விடயங்களை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடுமாறு குழு பரிந்துரை

GPS தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவக் கட்டமைப்பை செயற்படுத்துவது தொடர்பில் வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது, I3 CUBE நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கட்டமைப்பை செயற்படுத்துவதில் குறைபாடாகக் காணப்படும் பெரும்பாலான இ.போ.ச. பஸ்களில் GPS உபகரணங்கள் பொருத்தப்படாமல் உள்ளமை மற்றும் நிம்பஸ் நிறுவனத்தினால் மேல்மாகாண சபைக்கு  அறிமுகப்படுத்தியுள்ள பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ கட்டமைப்பின் கடவத்தையை மையமாகக் கொண்ட 12 வீதிகளில் 135 பஸ்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாலக பண்டார கோட்டெகொட தலைமையில் அண்மையில் (11) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, I3 CUBE நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கட்டமைப்பை செயற்படுத்துவதற்குத் தேவையான தகவல்களை இ.போ.ச. பஸ்களிலுலிருந்து கிடைக்கப்பெறுவதில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர். அந்தக் கட்டமைப்பை செயற்படுத்துவதற்கு, ஒவ்வோர் வீதிகளுக்கும் குறைந்த அளவு 70 % தகவல்கள் தேவையாகவுள்ளன.

அத்துடன், நிம்பஸ் நிறுவனம் தயாரித்த கட்டமைப்பு கடவத்தையை மையமாகக் கொண்ட 12 வீதிகளில் இயங்கும் 135 பஸ்களில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதற்கமைய, இந்த இரண்டு தொழில்நுட்ப முறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்திய குழு, இந்த இரண்டு முறைகளும் மிகவும் வெற்றிகரமானது எனவும், ஆனாலும் இவற்றை செயற்படுத்துவதில் சிக்கல்கள் அவதானிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டியது. அதனால், நிம்பஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள தொழில்நுட்ப முறை, வருமானம் ஈட்டும் வழிகள் போன்ற விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி குழுவுக்கு அறிவிக்குமாறு குழு பரிந்துரைத்தது. அத்துடன், இ.போ.ச. பஸ்களுக்கு GPS பொருத்துவதை துரிதப்படுத்தி I3 CUBE நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தியுள்ள கட்டமைப்பை செயற்படுத்துமாறும் குழுவினால் பரிந்துரை வழங்கப்பட்டது.

அத்துடன், இது தொடர்பில் தேவையான தீர்மானங்களை எடுப்பதற்கு மூன்று வாரங்களில் மீண்டும் குழு கூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ அஷோக் அபேசிங்க, கௌரவ உதயகாந்த குணதிலக, கௌரவ (சட்டத்தரணி) பிரேம்நாத் சி. தொலவத்த மற்றும் கௌரவ குமாரசிறி ரத்நாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ඊ-මේල් මගින් පිලිතුරු දෙන්න එය පිට

කරුණාකර ඔබගේ අදහස් ඇතුළත් කරන්න.
කරුණාකර ඔබගේ නම ඇතුලත් කරන්න