நோயாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் சாசனத்தின் இறுதி வரைபுக்கு சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி

  • நோயாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்குத் தயாரிக்கப்பட்ட தெற்காசியப் பிராந்தியத்தில் முதலாவது சாசனம் இது – சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு

நோயாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் சாசனத்தின் இறுதி வரைபுக்கு சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி அண்மையில் (09) வழங்கப்பட்டது.

இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மயந்த திசாநாயக்க தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

சாசனத்தின் இறுதி வரைபு சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) உபுல் கலப்பத்தியினால் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மயந்த திசாநாயக்க ஆகியோருக்கு கடந்த 6 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

இந்த இறுதி வரைபு சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உப குழு மற்றும் அதன் நிபுணர்கள் குழுவினால் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நோயாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்குத் தயாரிக்கப்பட்ட தெற்காசியப் பிராந்தியத்தில் முதலாவது சாசனம் இதுவெனக் கருதப்படுகின்றது.

ඊ-මේල් මගින් පිලිතුරු දෙන්න එය පිට

කරුණාකර ඔබගේ අදහස් ඇතුළත් කරන්න.
කරුණාකර ඔබගේ නම ඇතුලත් කරන්න