இவ் ஊடக அறிக்கையை நாம் மிகவும் வேதனையுடன் வெளிவருவதற்கு முன்வர காரணம் குழந்தைகள் தொடர்புடைய சம்பவங்களை ஊடகங்கள் (அச்சு மற்றும் மின்னணு) தவறான முறையில் கையாள்வதே ஆகும்.

ஜூலை 2, 2024 அன்று நடந்த சம்பவம், இருவரின் மிகவும் துரதிர்ஷ்டவசமான மரணத்தை அனைத்து ஊடகங்களும் பரபரபாக்கி செய்திகள் வெளியிட்டன.  இக்கவலையான சம்பவத்தை பரபரபாக்கி ஊடகங்கள் வெளியிட்டதை நா ம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.  சிசிடிவி கவரேஜ் மூலம் இந்த சம்பவத்தைப் புகாரளித்தல், கிளிப்களில் இரண்டு குழந்தைகளும் எளிதில் அடையாளம் காணக்கூடியதாக இருப்பது மற்றும் இந்த சம்பவத்தை நாடகமாக்கும் முயற்சியில், குழந்தைகளின் உரிமைகள் கொடூரமாக மீறப்பட்டுள்ளதை நாம் மிக வேதனையுடன் உணர்கின்றோம்.  இறந்தவர்களை மதிக்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கை துரதிர்ஷ்டவசமாக முற்றிலும் மறக்கப்பட்டுள்ளதையும் இங்கே குறிப்பிட நேரிடுகிறது.

இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும் குழந்தைகள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.  கடந்த காலத்தில் டிவி மற்றும் பிற ஊடகங்களில் விரிவான அதிர்ச்சிகரமான அனுபவங்களை பார்வையிடும் குழ்ந்தைகள் பல நடத்தை மாற்றங்கள் மற்றும் மனோதத்துவ அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளாக மாறுவதை குழந்தை மருத்துவர்களாகிய நாம் தினமும் காண்கிறோம்.  இதுபோன்ற செயல்களை மற்றும் விரிவான அறிக்கைகளை அடிக்கடி ஊடகங்களில் பார்வையிடுதல்/கேட்டல் மற்றும் வாசிக்கும் போது, இவ்வாறான‌ சம்பவங்களை “சாதாரணம்” என்று கருதத் தூண்டும்.  இவ்வகையான் செய்திகள் பதின்ம வயது பிள்ளைகளை வெகுவாக பாதிக்கின்றது குறிப்பாக அத்தகைய தாக்கங்கள் மற்றும் அத்தகைய நடத்தையைப் பின்பற்றும் போக்கு அவர்களிடையே அதிகமாக உள்ளது.

மருத்துவ ஆய்வுகளின்படி பரபரப்பான ஊடக அறிக்கைகள் மற்றும் தற்கொலை முயற்சிகளை பார்வயிடல் தற்கொலை முயற்சிகளை அதிகரிக்கின்றன.

அதுமட்டுமின்றி, ஊடக விழுமியங்களை பின்பற்றாது இறந்த சிறார்களின் பெற்றோர் உறவினர்களை அவமரியாதை செய்ய ஊடகங்களுக்கு உரிமை உள்ளதா? அவர்களின் உணர்வுகள் கவலைகளை கருத்தில் கொள்ள வேண்டாமா? இந்த குழந்தைகளின் வாழ்க்கையின் கடைசி சில தருணங்களின் விவரங்களை காட்சிப்படுத்துதலில் என்ன பயன் உள்ளது?. இது என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? என உணர்ச்சியற்ற ஊடக அறிக்கையிடல் சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது

நாடும் நாட்டு மக்களும். ஊடகவியலாளர்கள் எதிர்காலத்தில் இது போன்ற விடயங்களை தவிர்க்க ஆவன செய்ய வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சர் என்ற முறையில் இவ்விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.  நமது நாட்டின் குழந்தைகளின் எதிர்கால நலனுக்கான தீர்வு நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

வைத்தியர் கோசல கருணாரத்ன‌/ தலைவர் குழந்தை மருத்துவ சங்கம்

வைத்தியர் அஸ்வினி பேனான்டோ/தலைவர், சிறுவர் பாதுகப்பு குழுமம்

ඊ-මේල් මගින් පිලිතුරු දෙන්න එය පිට

කරුණාකර ඔබගේ අදහස් ඇතුළත් කරන්න.
කරුණාකර ඔබගේ නම ඇතුලත් කරන්න