வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79 உறுப்புரைக்கு அமைய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (11) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

2016ஆம் ஆண்டு 03ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன சட்டத்தைத் திருத்துவதற்கான இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் கடந்த 03ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் குறித்த சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றி திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2024ஆம் ஆண்டு 48ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன (திருத்தச்) சட்டமாக அறியப்படும்.

ප්රතිචාරයක් දක්වන්න

කරුණාකර ඔබගේ අදහස් ඇතුළත් කරන්න.
කරුණාකර ඔබගේ නම ඇතුලත් කරන්න